நகர சேவைகளில் ஊழல், தாமதம், மற்றும் செயலிழப்பு போன்றவை பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. சமூக நகரம், சுத்தமான அமைப்பு, பழைய காகித ஆதாரத்தில் இயங்கும் நிர்வாகத்தை முழுமையாக மாற்றியமைத்து டிஜிட்டல் மயமாக்கி, அனுமதிகள், கட்டணங்கள், கண்காணிப்பு மற்றும் சேவைகளை நேரடியாக வழங்குதல். இந்த முயற்சி வெளிப்படைதன்மை, பொறுப்புணர்வு மற்றும் அணுகலுக்கான வழியைக் கொண்டுவரும்—அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பணம் எங்கே செல்கிறது, நகரம் எவ்வாறு அவர்களுக்கு சேவை செய்கிறது என்பதைக் காண்டு கொள்ளலாம்.
எங்கள் நோக்கம்
கொழும்பு நகர சபை கொழும்பு மக்களைப்போல் உழைக்க வேண்டும். இன்று, ஊழல், தாமதம் மற்றும் மறைந்த ஒப்பந்தங்கள் முன்னேற்றத்தை தடுக்கின்றன. இதை நாங்கள் சரி செய்யப் போகிறோம்—ஒவ்வொரு சேவையும், ஒவ்வொரு அனுமதியும், ஒவ்வொரு ரூபாயும் டிஜிட்டல் மயமாக்கப்படும். இந்த முயற்சி கொழும்பு மாநகர சபையை ஒரு காகித ஆவனமற்ற, மக்கள்முன்னேற்றம் கொண்ட, முழுமையாக கண்காணிக்க கூடிய அமைப்பாக மாற்றும்.
முக்கிய இலக்குகள்
- திறன் – தாமதங்களும் காகித வேலைகளும் இல்லாமல் வேகமான சேவைகள்.
- வெளிப்படைதன்மை – ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு முடிவும் கண்காணிக்கக்கூடியதாக இருக்கும்.
- ஊழல்-இலக்கு – இடைத்தரகர், அதிகாரப்பூர்வமற்ற கட்டணங்கள், மறைந்த கோப்புகளுக்கு இடமில்லை
ஊழல் மற்றும் தாமதம் எங்கு நிகழ்கிறது?
கொழும்பு மாநகர சபையின் பின்வரும் பிரிவுகளில் ஊழல், பிரத்தியேக சலுகைகள் மற்றும் செயல்திறன் குறைபாடுகள் காணப்படுகின்றன:
- அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் (கட்டட அனுமதிகள், தொழில் உரிமைகள்)
- நிலம் மற்றும் வீடமைப்பு ஒதுக்கீடுகள்
- ஒப்பந்த வழங்கல் மற்றும் விலை மனுக் கோரல் செயல்முறைகள்
- பொதுச் சந்தை கடை ஒதுக்கீடு
- குப்பை அகற்றல் மற்றும் தெரு பராமரிப்பு கண்காணிப்பு
- வருமான சேகரிப்பு மற்றும் கட்டண செலுத்தல் முறைகள்
- பொதுமக்கள் முறையீடுகள் மற்றும் சேவை கோரிக்கைகள்
டிஜிட்டல் நகர சபை தீர்வுகள்
1 ஆன்லைன் அனுமதி மற்றும் ஒப்புதல் முறை
- கட்டிட அனுமதிகள், வர்த்தக உரிமைகள், வியாபார இடங்கள் போன்றவற்றுக்கு நிகழ்நிலை (Online) ஊடாக விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பங்களை மேற்கோள் எண்கள் மூலம் கண்காணிக்கலாம் மற்றும் பொதுவெளியில் காலக்கெடுவை பார்க்கலாம்
- தாமதமான கோப்புகள் தானாகவே நிராகரிக்கப்படும், மற்றும் SMS/மின்னஞ்சல் மூலம் தகவல் வழங்கப்படும்
2. டிஜிட்டல் காணி மற்றும் வீடமைப்பு பதிவகம்
- தெளிவான, பொது Domain இல் உள்ள தரநிலைகளின் அடிப்படையில் (வருமானம், குடும்ப அளவு, அவசர நிலை)விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் முறை
- ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும், மற்றும் வெளிப்படையான க்யூ (queue) முறையில் முன்னுரிமை வழங்கப்படும்
- இடைத்தரகர் அல்லது தனிப்பட்ட கையாடல்களுக்கு இடமில்லை
- சமூக நகரம், சுத்தமான அமைப்பு
- வெளிப்படையான, டிஜிட்டல் மற்றும் ஊழல் இல்லாத கொழும்பை உருவாக்க ஒரு கொள்கை
3. மின்னியல்-விலைமனுக் கோரல் மற்றும் ஒப்பந்தத் தெளிவுத்தன்மை
- எல்லா டெண்டர்களும் முழுமையான காலக்கெடுக்கள் மற்றும் ஆவணங்களுடன் ஆன்லைனில் வெளியிடப்படும்
- தெரிவான ஒப்பந்ததாரர், திட்டத்தின் செலவு மற்றும் முடிவுக்காலம் பொதுவெளியில் தெரியப்படுத்தப்படும்
- திட்ட இடங்களில் செலவுகளும் முன்னேற்ற நிலையும் காண QR குறியீடுகள், இணைக்கப்படும்
4. நியாயமான விற்பனையாளர் மற்றும் சந்தை விலை கடை ஒதுக்கீடு முறை
- கடைகள் ஒதுக்க சீட்டிழுப்பு (lottery) முறை
- முறையாக மதிப்பீடு செய்யப்படும் வருடாந்தப் புதுப்பிப்புகள்
- அனுமதியற்ற கட்டணங்கள் அல்லது சலுகைகளுக்கு பூரண தடைவிதிப்பு
5. நேரடி பொது வேலை கண்காணிப்பு
- குப்பை வண்டிகள், வடிகால் பணிகள் மற்றும் தெரு பராமரிப்பு குழுக்களுக்கு GPS கண்காணிப்பு
- பொதுமக்கள் சேவையை கண்காணிக்க நேரடி டாஷ்போர்டுகள்
- குறைவான சேவைகளை WhatsApp வாயிலாக முறையீடு அளிக்கும் வசதி
6. பணமற்ற கட்டண முறை
- அனைத்து கட்டணங்கள், அபராதங்கள், கடை வாடகை மற்றும் உரிமக் கட்டணங்கள் ஆன்லைனில் மட்டுமே செயல்படும்
- சேவை மையங்களில் பணப் பரிவர்த்தனை முற்றிலும் நீக்கப்படும்
- பற்றுச் சீட்டுகள் உடனடியாக உருவாக்கப்பட்டு, பொது அறவீட்டு அறிக்கைகளில் காட்சிப் படுத்தப்படும்
7. திறந்த குடிமக்கள் கருத்துப் பின்னூட்டல் & முறைப்பாட்டு முகப்பு
- ஆன்லைன் மற்றும் மொபைல் மூலம் முறைப்பாடுகளை பதிவு செய்ய வசதி
- ஒரு கண்காணிக்கத்தக்க முறைப்பட்டு அடையாள எண் வழங்கப்பட்டு புதுப்பிப்புகள் வழங்கப்படும்
- தீர்க்கப்படாத வழக்குகளுக்கு ஏற்ற முறையில் மேல் நிலைகளுக்கு மாற்றும் பொறிமுறை
- ஒவ்வொரு வார்டிற்கும் மாதாந்திர செயல்திறன் மதிப்பீட்டு பலகை
8. பொது முறைப்பாடு முகாமைத்துவ கட்டமைப்பு
- மொபைல் அல்லது ஆன்லைன் வழியாக முறைப்பாடு அல்லது சேவை கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம் – தமிழ், සිංහල, மற்றும் English மொழிகளில்.
முறைப்பாட்டின் நிலையை கண்காணிக்க தனிப்பட்ட குறிப்பு எண் வழங்கப்படும் – SMS/மின்னஞ்சல் வழியாக புதுப்பிப்புகளை பெறலாம்.
- முறைப்பாடுகள் தீர்க்கப்படாதிருந்தால் தானியங்கியாக அடுத்த உயர் மட்ட நிலைக்கு (Escalation) அனுப்பப்படும் – தீர்வு வழங்குவதற்கான தெளிவான காலக்கேடு கொடுக்கப்படும்.
அவ்வாரெனில் நம் பொதுமக்கள் என்ன காண்பார்கள்?
- நகர இணையதளம் மற்றும் நகர சபை திரைகளில் ஒரு பொது காட்சிப்படுத்தல்:
- துறைரீதியான செலவீனம்
- பெறப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட முறைப்பாடுகள்
- நேரடி திட்ட மேம்படுத்தல்கள்
- குப்பை அகற்றல் மற்றும் பராமரிப்பு செயல்பாட்டு வரைபடங்கள்