நல்ல உடல்நிலை உங்கள் அடிப்படை உரிமை — சிலருக்கு மட்டும் கிடைக்கக்கூடிய சிறப்பு வாய்ப்பு அல்ல.
“ஆரோக்கியமான கொழும்பு, வலுவான வாழ்க்கை” எனும் திட்டம் பொது மருத்துவ நிலையங்களை வலுப்படுத்த, மலிவான சிகிச்சை அணுகலை மேம்படுத்த, மற்றும் சமூகநல ஆரோக்கியத்தை உறுதி செய்ய செயல்படுகிறது.
தடுப்பூசி மருத்துவம், கௌரவம், மற்றும் வார்டு அளவிலான சேவைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, உயர்தர சுகாதார சேவைகளை ஒவ்வொரு இல்லத்திற்கும் அருகில் கொண்டு வர இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பிரச்சினை?
கொழும்பின் குறைந்த வருமான குடும்பங்கள் அடிப்படை சுகாதார சேவைகளை பெற போராடுகிறார்கள்.
- அரச மருத்துவமனைகள் மிகவும் கூட்டம் நிறைந்துள்ளன, குறைந்த ஊழியர்களுடன் செயல்படுகின்றன, மற்றும் மக்களின் வசிப்பிடங்களிலிருந்து தூரமாக உள்ளன.
- நீண்ட பயண நேரம், அதிக போக்குவரத்து செலவுகள், மற்றும் வேலை இழப்பு காரணமாக மக்கள் மருத்துவ உதவியை தாமதமாக பெறுகிறார்கள் — குறிப்பாக தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
- தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மிகவும் செலவானவை.
- பெரும்பாலான பகுதிகளில் நோய் தடுப்பு பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
இப்போது எங்களுக்கு உள்ளவற்றை பார்க்கலாம்:
- மத்திய பகுதியில் அமைந்துள்ள பெரிய அரச மருத்துவமனைகள் (உ.தா:) தேசிய மருத்துவமனை, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை).
- சில MOH (மருத்துவ அதிகாரி) அலுவலகங்கள், (தடுப்பூசிகள் மற்றும் தாய்ப்பாலூட்டும் ஆரோக்கியத்திற்கானவை.)
- சில NGO-க்கள் நடத்திய சிதறிய மருத்துவ முகாம்கள் மற்றும் மொபைல் கிளினிக்குகள்.
இவற்றை எப்படி மேம்படுத்தப் போகிறோம்?
1. குறைவாக சேவை செய்யப்படும் பகுதிகளில் அதிக மொபைல் மருத்துவ முகாம்கள்
- மருத்துவ பல்கலைக்கழகங்கள் மற்றும் NGO-களுடன் இணைந்து மொபைல் மருத்துவ சேவைகளை அதிகரிக்க
- முறையான பரிசோதனைகள், தாய்ப்பாலூட்டும் பராமரிப்பு, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனை, மற்றும் அடிப்படை மருந்துகள் வழங்கல்
- வானதம்முள்ள, மட்டக்குழி, தெமட்டகொட, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ், காக்கைத்தீவு போன்ற குறைந்த வருமான பகுதிகளுக்கு முன்னுரிமை
2. உள்ளூர் சுகாதார தன்னார்வலர் (volunteers) பயிற்சி
- குடும்பங்களுக்கு அடிப்படை சுகாதார உதவியை வழங்க இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை தெரிவு செய்து பயிற்சி அளிக்க
- முதலுதவி, மருந்து நினைவூட்டல், மருத்துவமனை குறிக்கோள்கள் வழங்குதல் போன்ற அடிப்படை சேவைகள்
- மருத்துவநிலையங்கள் மற்றும் குடும்பங்களை இணைக்கும் முக்கிய பாலமாக செயல்படுவார்கள்
3. குடியிருப்பு பகுதியில் சுகாதார உதவிக் கவுன்டர்கள் (Health Desks)
- வார்டு அலுவலகங்கள் அல்லது சமூக மையங்களில் சிறிய மருத்துவ உதவிக் கவுன்டர்கள் அமைக்க
- அங்கு மக்கள் பின்வரும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்:
- அடிப்படை மருத்துவ ஆலோசனைகள் பெறலாம்
- நீண்டகால நோய்களுக்கு (இரத்த அழுத்தம், நீரிழிவு) மருந்துகளை மீள நிரப்பலாம்
- அருகிலுள்ள மருத்துவமனைகளில் முன்னேற்கால (appointment) பதிவு செய்யலாம்
புதிய திட்டங்கள்
1. கொழும்பு சுகாதார அட்டை (Colombo Health Card)
- குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஒரு எளிய அடையாள அட்டை (காகிதம் அல்லது டிஜிட்டல்) வழங்கப்படும்:
-
- தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளின் பதிவை கண்காணிக்க
- இணைந்த கிளினிக்குகளில் இலவச சேவைகளை பெறலாம்
- மொபைல் மருத்துவ முகாம்களுக்கு பதிவு செய்து பின்தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
2. ஆன்லைன் சுகாதார கண்காணிப்பு (Online Health Tracker)
- நகராட்சி சுகாதார டாஷ்போர்டு (வார்டு அலுவலகங்களிலும் காண்பிக்கப்படும்):
- வரவிருக்கும் இலவச மருத்துவ முகாம்கள்
- ஒவ்வொரு பகுதியில் பொதுவாக உள்ள சுகாதாரப் பிரச்சினைகள்
- சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை
3. அவசர உதவி பயிற்சி (Emergency Response Training)
- முதலுதவி மற்றும் CPR பயிற்சி வழங்கல்:
- தொண்டு பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள் போன்றோருக்கு
- அம்புலன்ஸ் சேவை குறைவாக உள்ள பகுதிகளில் திடீர் உடல்நலக் கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளை குறைத்தல்.
4. தாய் மற்றும் குழந்தை சுகாதார நலனில் கவனம் செலுத்தல் (Mother & Child Health Focus)
- கோளாறுகளுக்கான இலவச உணவுப் பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் வழங்கல்
- இரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுவாச பிரச்சினைகளுக்கான ஆரம்ப பரிசோதனைகள்
முதலமைக்க வேண்டிய முக்கிய பகுதிகள்:
- வனாதம்முள்ள, மாளிகாவத்தை, தெமட்டகொட, மட்டக்குளி, கிராண்ட்பாஸ்
- ஓபேசேகரபுரம் (குறைந்த வருமான குடியிருப்புகள்), ரயில் பாதை குடியிருப்புகள் (காக் கைத் தீவு, கொலன்னாவ எல்லை)