கொழும்பில் தொலை தூரங்கள் நடக்க வேண்டிய அவசியம், முடிவற்ற காத்திருப்பு, மற்றும் நம்பத்தகாத பஸ்கள் அன்றாட வாழ்வை கடினமாக்குகிறது.
- மாணவர்கள், வேலைக்குச் செல்லும் மக்கள், மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து தேவை.
- “கிட்டிய வழிகள், வலுவான இணைப்புகள்” இந்த திட்டம் அனைவரும் அணுகக்கூடிய, நவீன மற்றும் செயல்திறன் மிக்க போக்குவரத்து அமைப்பை உருவாக்க தயாராகியுள்ளது.
முக்கிய பங்காளிகள்
- இலங்கை போக்குவரத்து சபை (SLTB) – அரச பேருந்துகளை இயக்கும் அமைப்பு.
- தனியார் பேருந்து இயக்கங்கள் – கொழும்பு பேருந்து பாதைகளில் 50% க்கும் மேற்பட்ட போக்கு வருத்து சேவை இவர்களால் வழங்கப் படுகிறது.
- தேசிய போக்குவரத்து அதிகாரசபை (NTC) – மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பு.
- கொழும்பு மாநகர சபை (CMC) – உள்ளூர் வீதிகள் / சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளை நிர்வகிக்கும் அமைப்பு.
- போக்குவரத்து பொலிஸ் துறை & போக்குவரத்து அமைச்சு – போக்குவரத்து விதிகளை அமுல்படுத்தும் அமைப்புகள்.
- பயணிகள், சாரதிகள், மற்றும் சிறிய தொழில் செய்வோர் – தினசரி வீதிப் போக்குவரத்திற்கு இன்றியமையாதவர்கள்.
நகரின் தற்போதைய போக்குவரத்து நிலைமை
- உச்ச நேரங்களில் பேருந்துகள் அதிகமாக நெரிசலாக உள்ளன.
- பேருந்துகள் பழையதும், புகை உமிழ்வதாலும், பராமரிப்பு குறைவதாலும் போக்குவரத்து திறன் குறைவாக உள்ளது.
பேருந்து தரிப்பிடங்களில் மழைப் பாதுக்காப்பு, ஒளியமைப்பு, மற்றும் வழித்தட தகவல்கள் இல்லை.
- முக்கிய போக்குவரத்து இடங்களில் தனி பேருந்து பாதைகள் இல்லை, தனியார் வாகன நெரிசலால் பேருந்துகளும் மாட்டிக்கொள்கின்றன
- தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை.
- குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் முதியவர்களுக்கு, வீதிகள் மற்றும் பஸ் தரிப்பு நிலையங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன,
முக்கிய போக்குவரத்து நெருக்கடி மற்றும் அபாயப்புள்ளிகள்
உயர் சாலை நெரிசல் மற்றும் பயணிகள் பாதுகாப்பற்ற பகுதிகள்:
நாம் மேம்படுத்தவிருக்கும் அம்சங்கள்
- புதிய மழைநீர் பாதுகாப்புகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள், ஒளியமைப்பு, மற்றும் வழித்தட தகவல்களை வழங்குதல்.
- பேருந்து நிறுத்தங்களின் அருகே பாதுகாப்பான குறுக்கு வழிகள் மற்றும் ஒளியுடன் கூடிய சிக்னல்கள் அமைத்தல்.
- SLTB மற்றும் தனியார் பேருந்து பாதைகளை ஒருங்கிணைத்து, பயணிகளை விரைவாக கொண்டு செல்லும் திட்டம்.
- சாரதிகளுக்கு பயணிகள் சேவையின் தரத்தை மேம்படுத்த பயிற்சி மற்றும் கண்கானிப்பு.
- மாணவர்களும் முதியவர்களும் பாதுகாப்பாக காத்திருக்க “பாதுகாப்பான காத்திருப்பு இடங்கள்” (Safe Waiting Spaces) அமைத்தல்.
- சாலைகளில் அசாதாரணமாகப் பேருந்துகள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்த, “Bus Stop Only Pickup” நடைமுறை கடுமையாக அமல்படுத்தல்.
- அபாயகரமான திருப்பங்கள், பள்ளங்கள் மற்றும் மோசமான சாலைகளை அடையாளம் காண்பதற்கும் சரிசெய்ய்பதற்கும் திட்டமிடல்.
- தாழ்த்தப்பட்ட பகுதிகளில் சிறிய பஸ்கள் மற்றும் வான்கள் இணைத்து சிறிய தூர பயண வசதிகளை மேம்படுத்துதல்.
நாம் அறிமுகப்படுத்த உள்ள புதிய திட்டங்கள்
- “Move Colombo” செயலி தொடங்குதல் –பேருந்து இருப்பிடங்களின் நேரடித் தகவல், வரும் நேரங்கள், மற்றும் வழிச்சூழல்கள் பற்றிய தகவல்களை வழங்கும் மொபைல் செயலி அறிமுகம்.
- தெளிவான அடையாளங்களுடன், அதிக போக்குவரத்து பாதைகளில் தனியதாக ஒதுக்கப்பட்ட பேருந்து வழிகளை (Dedicated Bus Lanes) அறிமுகப்படுத்துதல்.
- பொது மற்றும் தனியார் கூட்டு ஒத்துழைப்பின் கீழ், மின்சார மற்றும் குறைந்த மாசுபடுத்தலை ஏற்படுத்தும் பேருந்துகளை அறிமுகப்படுத்துதல்.
- பேருந்து வருகை நேரத்தை நேரடியாகக் காட்டும் வசதி-நுண்ணறிவு பேருந்து நிறுத்த காட்சிப் பலகைகள் (Smart Bus Stop Displays) அமைத்தல் .
- பாதுகாப்பு அம்சங்களுடன்,பெரிய பேருந்து நிறுத்தங்களில் பெண்கள் பாதுகாப்பு மண்டபங்கள் (Women’s Safety Zones) அமைத்தல்.
- பணப் பரிவர்த்தனையை குறைத்து, பயணிகள் எளிதாக ஏறுவதற்கு, முன்பணம் செலுத்தும் பயணக் கார்டு முறை (Prepaid Travel Card System) அறிமுகப்படுத்துதல் .
- பேருந்து போக்குவரத்து தாமதங்களை குறைக்க, முன்னுரிமை பேருந்து சிக்னல்களை (Bus Priority Signals) முக்கிய சந்திகளில் அமைத்தல்.
- குறைந்த வருமானக் குடியிருப்பு பகுதிகளை முக்கியமான பேருந்து பாதைகளுடன் இணைக்கும் சிறிய பேருந்துகள், குறிப்பாக பாடசாலை விடும் நேரங்களில், சமூக இணைப்பு பாதைகள் (Community Connect Routes) தொடங்குதல் .
- உச்ச நேர போக்குவரத்து மற்றும் பேருந்து நெரிசலைக் குறைக்க தன்னிச்சையாக செயற்படும் நவீன போக்குவரத்து விளக்கு முறை (Smart Traffic Light System) அறிமுகப்படுத்துதல் .
- முக்கியப் பொதுப் போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்த இடங்களில் மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் மின்சார சார்ஜிங் நிலையங்கள் (E-Charging Stations) அமைத்தல்
- இலங்கை புகையிரத துறை (CGR) உடன் இணைந்து, முக்கிய நெரிசல் வாய்ந்த பகுதிகளை வேகமாக இணைக்கும் வகையில்.
- இலங்கை புகையிரத துறை (CGR) உடன் இணைந்து, முக்கிய நெரிசல் வாய்ந்த பகுதிகளை வேகமாக இணைக்கும் வகையில், குறுகிய தூர, அதிக அதிர்வெண் கொண்ட ரயில் சேவை (Short-Distance, High-Frequency Train Service) அறிமுகப்படுத்துதல் .
நேரடி கண்காணிப்பு மற்றும் பொது பொறுப்புணர்வு
- மாதாந்திர பேருந்து சேவையின் தர மதிப்பீடு பகிர்வு.
- பயணிகள் கருத்துகளை “Move Colombo App” மூலம் பதிவு செய்யும் வசதி.
- அதிருப்தியான பயணிகள் புகார்களை வெளியிடும் மற்றும் அதற்கான தீர்வுகளை பகிரும் திறந்த பிளாட்பார்ம்.
- காலாண்டு கண்காணிப்பு கூட்டங்கள், பயணிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு.