ஒரு நகரம் உண்மையாகவே நவீனமாக இருக்க வேண்டுமெனில், அனைவரும் – முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட – அதில் பங்கு பெற வேண்டும்.
“தடையின்றி எங்கும் போக வழி அமைப்போம்”
இந்த திட்டம் பொது இடங்களை கண்காணித்து, இணைவு மிக்க கட்டமைப்புகளை உருவாக்கி, ஆதரவு பணியாளர்களை பயிற்றுவித்து, மேலும் மிகவும் தேவைப்படும் மக்களுக்காக சிறப்பு அனுமதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நோக்கம்: கொழும்பில் எவரும் தங்களின் சொந்த நகரத்திலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது!
தற்போதைய நிலை
- சில பொது இடங்கள் மற்றும் கட்டடங்களிலே சக்கர நாற்காளி நுழைவு வசதிகள் உள்ளன.
- சில தனியார் கட்டடங்களில் ஏறும் வளைவுகள் உள்ளன, ஆனால் பொதுச் சுகாதார கழிவறைகள், சந்தைகள் மற்றும் பூங்காக்களில் அவ் வசதிகள் இல்லாமல் உள்ளன.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நகர்வதற்கான ஆதரவு அமைப்பு இல்லை.
- அறிவிப்புகள், தகவல்கள் பெரிய எழுத்து, ஆடியோ அல்லது எளிய மொழியில் கிடைக்கவில்லை.
நாம் மேம்படுத்தும் அம்சங்கள்
- அணுகல்தன்மை மதிப்பீடு (Accessibility Audit) தொடங்குதல் – கட்டடங்கள், கழிப்பறைகள், நடைபாதைகள், மற்றும் பொது இடங்களில் உள்ள குறைபாடுகளை இனம் காணுதல்.
- முன்னுரிமை பகுதிகளில் மேம்படுத்தல் – வார்டு அலுவலகங்கள், பூங்காக்கள், சந்தைகள், மற்றும் பேருந்து நிறுத்தங்கள் போன்ற அதிக பயன்பாட்டு இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் மாற்றங்கள் செய்தல்.
- பொது பணியாளர்களுக்கு அடிப்படை மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு பயிற்சி வழங்குதல்.மறதி நோயாளிகளின் குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு
- “பாதுகாப்பான திருப்பி வரவைக்கும் அடையாள அட்டை” (Safe Return ID) திட்டத்தை தொடங்குதல் – வழிதவறிப் போகும் அல்லது காணாமல் போகும் நபர்களை அடையாளம் காண உதவி செய்யும் ஒரு திட்டம்.
- சமூக அடிப்படையிலான தினப் பராமரிப்பு குழுக்கள் ஏற்படுத்தல் – தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டுகளை அமைத்து, பராமரிப்பாளர்கள் பணியில் செல்லும் நேரங்களில் அவர்களின் அன்புக்குரியவர்களை பாதுகாப்பான மற்றும் கண்காணிக்கப்படும் சூழலில் விட்டுச் செல்லும் வசதி வழங்குதல்.
நாம் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய அம்சங்கள்
1. மக்களின் பொது தேவைக்காக நிதி (City Accessibility Fund)
- பொது கட்டடங்களில் வளைவுகள், கைப்பிடிகள், அணுகக்கூடிய கழிவறைகள் மற்றும் அடையாளப்பலகைகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு.
- அதிக மக்கள் அடையும் பகுதிகளில் முன்னுரிமை (சந்தைகள், மயானங்கள், பொது போக்குவரத்து நிலையங்கள்).
2. கொழும்பு பராமரிப்பு அட்டை (Colombo Care Pass)
- முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச நகர அட்டை
- முன்னுரிமை பெற்ற வாகனப் பயண வாய்ப்பு
- மருத்துவ மைய முன்பதிவு, சிறப்பு சேவைகள்
- பராமரிப்பாளர்களும் பதிவு செய்யும் வசதி
3. அனைவர் வசதிக்குமான தகவல் கருவிகள் (Inclusive Communication Tools)
- நகர அறிவிப்புகள் பெரிய எழுத்து, ஆடியோ வடிவம், எளிய மொழியில் பகிரப்படும்.
- சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் தகவல்கள் வழங்கப்படும்.