இளைஞர்(வேலைவாய்ப்பு இல்லாமை) கொழும்பில் ஒரு முக்கிய சமூக சிக்கலாக உள்ளது. இதற்கு மேலும் அரசாங்க வேலைகள் உருவாக்குவது தீர்வாக இருக்க முடியாது; மாறாக, உண்மையான தொழில் வாய்ப்புகள் உருவாக வேண்டும். நாளைய தினத்திற்கான வேலை வாய்ப்புகள் திட்டம் திறன் வளர்ப்பு பயிற்சிகள், சிறு தொழில் ஆதரவு, வேலை தொடர்பு மையங்கள், மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடனான கூட்டுறவை உருவாக்கும். இளைஞர்கள் தங்கள் சொந்த நகரத்திலேயே வளர்ச்சியடைய, அவர்களுக்கு தேவையான கருவிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்க இது உதவும்.
பிரச்சினை என்ன?
- பல இளைஞர்கள் பாடசாலை முடித்தவுடன் அல்லது படிப்பை இடையில் கைவிட்டவுடன் வேலை வாய்ப்பின்றி நிற்கிறார்கள் –
- உள்ளூர் வேலை வாய்ப்புகள் குறைவு – தொழில் துறைகள் குறித்த அறியாமை மற்றும் வேலைகளை இணைக்கும் ஆதரிப்பு அமைப்புகள் இல்லை.
- இது இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் – வேலை இல்லாமை போதைப்பொருள், குற்றச்செயல்கள், மற்றும் வாழ்க்கையில் நம்பிக்கையின்மையை உருவாக்குகிறது.
- அரசாங்க வேலைகள் வரையறுக்கப்பட்டவை – அதிக வேலைகள் உருவாக்குவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது.
தீர்வுகள் – நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?
தற்போதைய நிலைமை
அரசாங்கம் வழங்கும் சில பயிற்சி திட்டங்கள் பழையவை, சில தனியார் நிறுவனங்கள்
பயிற்சிகள் வழங்குகின்றன – ஆனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு பெற முடியாதுள்ளது. சில NGO மற்றும் தொண்டு அமைப்புகள் வேலைகளை செய்த போதிலும் அவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை
எனவே அரசாங்க வேலைகளை உருவாக்காமல், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் இடையே உறவுகளை உருவாக்குவோம்.
நாங்கள் மேம்படுத்தப் போவது,
- உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தல் – (கடைகள், டெலிவரி நிறுவனங்கள், மெக்கானிக் நிலையங்கள், அழகுசேவை நிலையங்கள், டெக் நிறுவனங்கள்) பகுதி நேர வேலைகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் வழங்குவோம்.
- ஒவ்வொரு வார்டிலும் வேலை தேடும் இளைஞர்களை அடையாளம் காண்போம்.
- திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்குதல் – (டெலிவரி செயலிகள், வாடிக்கையாளர் சேவை, கட்டிடப்பணிகள், பாதுகாப்பு சேவை, சுகாதார சேவை, வீட்களைத் தூய்மையாக்கும் பணிகள், மற்றும் அதுபோன்ற பிற தகுதியான வேலைவாய்ப்புகளை வழங்குதல்).
எங்களது புதிய முயற்சிகள்
1. ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் வேலை தொடர்பு மையங்கள்
- இளைஞர்கள் இங்கு பதிவு செய்து வேலை வாய்ப்புகள், திறன் பயிற்சிகள், மற்றும் வழிகாட்டுதலைப் பெறலாம்.
- உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களுடன் இளைஞர்கள் இணைக்கப்படுவர்.
2. கொழும்பு திறன் பாஸ்போர்ட்
- பயிற்சி முடித்தல் மற்றும் வேலை அனுபவத்தை பதிவு செய்யும் எளிய கார்டு (டிஜிட்டல் / ஃபிசிக்கல்).
- வழக்கமான கல்வி சான்றிதழ்கள் இல்லாவிட்டாலும், இளைஞர்கள் தங்கள் திறன்களை நிரூபிக்க உதவுமதல்.
3. இளைஞர் வேலை நிலையங்கள்.
- தோட்டங்கள், கோவில்கள், தேவாலயங்கள், மற்றும் பள்ளிவாசல்களில் மாதாந்த வேலைப் பயிற்சிகள் நடத்தப்படும்.
- சிறிய தொழில் வல்லுநர்கள் (மெக்கானிக், கடை உரிமையாளர்கள், செவிலியர்கள்) இளைஞர்களுக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்தல்.
4. இளைஞர் திறன் தினங்கள்
- ஒவ்வொரு பிரதேசத்திலும் மாதந்தோறும் வேலைகள் வழங்கும் நிகழ்வுகள்.
- நிறுவனங்கள் நேரடியாக இளைஞர்களை சந்தித்து, அவர்களின் திறன்களை பார்வையிட்டு, வேலை வாய்ப்புகளை வழங்க ஏற்பாடு செய்தல்.
5. சிறு தொழில்கள் தொடங்க ஆதரவு நல்குதல்.
- நேரடியாக பண உதவி வழங்காமல், முக்கிய கருவிகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.
(மண்வெட்டிகள், தையல் இயந்திரங்கள், மிதிவண்டி பழுது பார்க்கும் கருவிகள், கைபேசி பழுது பார்க்கும் சாதனங்கள்) வழங்கப்படும்.
- நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி மற்றும் வழிகாட்டுதலுடன் உதவி செய்யப்படும்.